கேரளாவை போல் திருவண்ணாமலையில் நரபலியா.? மாந்திரீக பூஜையில் ஈடுபட்ட 6 பேரால் பரபரப்பு

By Raghupati R  |  First Published Oct 14, 2022, 9:31 PM IST

கேரளாவைப் போல ஆரணியில் நரபலி கொடுப்பதற்காக மாந்திரீக பூஜை  நடைபெறுவதாக வந்த தகவல் பரபரப்பை கிளப்பியுள்ளது.


கேரள மாநிலத்தில் சமீபத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் திருவண்ணாமலை, ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட சடங்குகளில் ஈடுபடுவதாக தகவல் வெளியானது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க..காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1 லட்சம் வேலை முதல் பழைய ஓய்வூதிய திட்டம் வரை.. மாஸ் காட்டிய பிரியங்கா காந்தி

கேரளாவில் நடந்தது போல இங்கு நரபலி கொடுக்கப்படுகிறதா ? என்ற தகவல் நான்கு பக்கமும் பரவ, ஊர் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வீட்டை முற்றுகையிட்டனர். உடனே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் அங்கு பார்த்த போது,  அந்த வீடு பூட்டப்பட்டு கிடந்தது. உடனடியாக ஜே.சி.பி. வாகனத்தை வரவழைத்த போலீசார் அதன் மூலம் வீட்டின் முன்பக்கத்தை இடித்தனர்.

தொடர்ந்து அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த அவர்கள் அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த 6 பேரை மீட்டனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த குடும்பத்தை சேர்ந்த நபருக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்காக பூஜை செய்து வந்ததாகவும் கூறியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் தங்கள் கண்காணிப்பின் கீழ் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க..தீபாவளி வசூல் எதிரொலி.. அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை !!

இதில் வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது. பேய் பிடித்ததாக நம்பி அடைத்துவைக்கப்பட்ட இரண்டு பேரையும் ஆரணி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..அரசியலை விட்டுட்டு விவசாயம் பண்ண முடியும்.. நீங்க பண்ண முடியுமா ? முதல்வரை மறைமுகமாக விளாசிய அண்ணாமலை

click me!