சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யா மற்றும் அவரது மறைவால் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அவரது தந்தை மாணிக்கம் ஆகிய இருவரது உடல்களும் சத்யாவின் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை, கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய்- தந்தையுடன் வசித்து வந்தவர் சத்யா என்கிற சத்ய ப்ரியா. இவருக்கு வயது 20. இவர் தி.நகரில் உள்ள ஜெயின் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1:15 மணியளவில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்துள்ளார்.அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போதே சத்யாவின் கையைப் பிடித்து நடைமேடை 1-ல் பீச் நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார். ரயில் ஏறி இறங்கியதில் சத்யாவின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?
பின் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடிவிட, ரயில் நிலையத்திலிருந்து சத்யாவின் தோழிகள் மற்றும் பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்கள் காதலுக்கு மறுப்பு சொன்னாலே, அல்லது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொண்டாலே, அவர்களை கொல்லும் சம்பவம் இன்றளவும் நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி மாணவி ஸ்வேதா (வயது 20) ராமச்சந்திரன் என்பவரை காதலிக்க மறுத்ததால், அந்த இளைஞர் கல்லூரிக்கு அருகே ஸ்வேதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !
2016ம் ஆண்டில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. இன்னும் இதுபோல பல காதல் வலை வீசும் இளைஞர்களால் பின்தொடரப்படும் பெண்கள் பட்டப்பகலில் பொது இடங்களில் கொல்லப்படும் சம்பங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக