கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கு.. அக்.28 வரை இளைஞருக்கு நீதிமன்ற காவல்!!

By Narendran SFirst Published Oct 14, 2022, 6:23 PM IST
Highlights

கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷை அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷை அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கத்தில் வசித்து வந்த மாணிக்கம் என்பவரின் மகள் சத்யா தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் சதீஷ் என்பவர் சத்யாவை காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த சத்யாவிடம் தன்னை காதலிக்குமாறு சதீஷ் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: அவள உருகி உருகி காதலிச்ச.. அப்படி இருந்தும் எதுக்கு கொலை செய்தேன் தெரியுமா? சதீஷ் சொன்ன ஷாக் தகவல்..!

அதற்கு சத்யா மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பியோடிவிட்டார். இதில் சத்யா ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், தப்பியோடிய சதீஷை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நள்ளிரவு 12:30 மணியளவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சதிஷிடம் மேற்கொண்ட விசாரணையில் சத்யாவும் சதீஷும் பல ஆண்டு காலமாக காதலித்ததும் பின்னர் சதீஷ் உடனான காதலை சத்யா முறித்துக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரயில் முன் தள்ளி சதீஷ் கொலை செய்தார் என்பதும் தெரியவந்தது.

இதையும் படிங்க: சுவாதி முதல் சத்யா வரை சென்னையில் தொடரும் ரயில்வே ஸ்டேஷன் கொலைகள் !!

இதை அடுத்து கைது செய்யப்பட்ட சதீஷ் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷை அக்டோபர் 28 வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த சத்யாவின் தந்தை மன உளைச்சலில் விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!