2 வருடம் காத்திருந்து அண்ணனை கொன்றவரை ஸ்கெட்ச் போட்டு பழிதீர்த்த தம்பி.. கடலூரில் பயங்கரம்..!

Published : Jul 27, 2022, 06:40 PM ISTUpdated : Jul 27, 2022, 06:42 PM IST
2 வருடம் காத்திருந்து அண்ணனை கொன்றவரை ஸ்கெட்ச் போட்டு பழிதீர்த்த தம்பி.. கடலூரில் பயங்கரம்..!

சுருக்கம்

கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூரில் அண்ணனை கொலை செய்தவரை பழிக்குப்பழியாக கொலை செய்த தம்பி உட்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டை பிடாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பு என்கிற கண்ணன் (26). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கம்மியம்பேட்டை பி.ஆர்.எஸ். வெங்கடேசன் நகரில் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணனை சுத்துபோட்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.  இதனை தடுக்க வந்த அவரது நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது. 

இதையும் படிங்க;- அய்யய்யோ என்ன காப்பாத்துங்க.. நடுரோட்டில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை..!

இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த கொலை குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகளை அமைக்கப்பட்டது.  மேலும், அப்பகுதியில் இருந்தத சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும், கண்ணனின் நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;-ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் உல்லாசம்..! தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலர்களை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!

முதற்கட்ட விசாரணையில் கண்ணனை கொலை செய்தது எம்.புதூர் புதுநகர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அச்சிறுவனின் அண்ணன் காமராஜை கண்ணன் கடந்த 2020-ம் ஆண்டு கொலை செய்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கில் தனது அக்கா கணவர் உட்பட 4 பேருடன் சேர்ந்து கண்ணனை கொலை  செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!