செத்த பிறகும்.. 75 வயது காமக்கொடூரனை அடையாளம் காட்டிய சிறுமி.. வீடியோ எடுத்தவர்களுக்கும் ஆப்பு..!

By vinoth kumar  |  First Published Jul 27, 2022, 4:03 PM IST

பாம்பு கடித்து 9 வயது சிறுமி  உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம் 75 வயது முதியவர் பாலியல் பலாத்காரம்  செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


பாம்பு கடித்து 9 வயது சிறுமி  உயிரிழந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பாக அந்த சிறுமியிடம் 75 வயது முதியவர் பாலியல் பலாத்காரம்  செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு, தாய், தந்தை இல்லாத 9 வயது சிறுமி, தனது உறவினருடன் தங்கி, அருகில் உள்ள அரசு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24ம் தேதி செங்கல் சூளை பின்புறம் உள்ள திறந்தவெளியில் சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்றபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பீச் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போய் சிறுமியை காதலனுக்கு விருந்தாக்கிய காதலி!மிரட்டி பணம் பறித்த ஜோடிக்கு ஆப்பு

இதுகுறித்து, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இந்த சிறுமியை முதியவர் ஒருவர் பலாத்காரம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றி அறிந்த சிறுமியின் உறவினர்கள் சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க;- எனக்கும் உனக்கும் செட்டாகாது! காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவி கீர்த்தனா! சரமாரியாக குத்திக்கொன்ற பிரபல ரவுடி.!

அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், புதிய எருமைவெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (எ) சின்னதுரை (25), பாஸ்கர் (20), சதீஷ் (22), ரமேஷ் (24), விஜயகுமார் (25) ஆகியோர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில், அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்ற முதியவர் (75)  கடந்த 3 மாதங்களுக்கு முன், சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை வாலிபர்கள் 5 பேரும் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதும் தெரிந்தது. இதையடுத்து, முதியவர் உள்பட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவி இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாது என்ற நினைப்பில் வீடியோவை பகிர்ந்தவர்களும் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். 

இதையும் படிங்க;-  31 வயது ஆன்ட்டி குளிப்பதை அங்குலம் அங்குலமாக வீடியோ எடுத்த 21 வயது இளைஞர்.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

click me!