கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் கேசவன் (45). இவர், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.
ரியல் எஸ்டேட் அதிபர் சினிமா பாணியில் 8 பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் கேசவன் (45). இவர், செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், தளி அருகே உள்ள என்.கொத்தூர் கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் கடன் வாங்கியிருந்தார். அதை வசூலிக்க இருசக்கர வாகனத்தில் கேசவன் சென்றுக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் கொலை; மனைவியின் செயலால் அதிர்ந்த காவல்துறை
கே.மல்லசந்திரம் கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்த போது கேசவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது காரில் வந்த கும்பல் மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறி கேசவன் கீழே விழுந்துள்ளார். அப்போது, காரில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 8 பேர் கொண்ட கும்பலை பார்த்ததும் கேசவனை உயிர் பயத்தில் ஓட ஆரம்பித்தார். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டியது. இதில், கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதையும் படிங்க;- என்னோட நீ பேசலன்னா! நாம உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன்! மிரட்டிய காதலன்! இறுதியில் நடந்த பகீர்
இந்த சம்பவ தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கேசவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.