
தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் ஆவுடையப்பனின் உறவினரான டிஎம்பி காலனியைச் சேர்ந்த சுடலைமணிக்கும், சுப்புலட்சுமிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனை ஆவுடையப்பன் கண்டித்த நிலையில், சுப்புலட்சுமி அவரை பிரிந்து சுடலைமணியுடன் வாழ்ந்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆவுடையப்பனின் மகனான கணேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுடலைமணியின் வீட்டிற்குச் சென்று தாய் மற்றும் சுடலைமணியை கண்டித்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த கூலித்தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்
இந்நிலையில், கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மகன் கணேஷை கொலை செய்ய கள்ளக்காதலன் சுடலைமணியுடன் சேர்ந்த சுப்புலட்சுமி திட்டம் தீட்டி உள்ளார். அதன் அடிப்படையில் நேற்று இரவு டிஎம்பி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கணேசை சுடலைமணி உள்பட 2 பேர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். கொலை குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விடுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டம்: வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவாக உள்ள சுப்புலட்சுமி, சுடலைமணி உள்பட 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற மகனை தாயே கொலை திட்டம் தீட்டி கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.