ஊர் ஊராக அழைத்து சென்று ரூம் போட்டு என்ன நாசம் செஞ்சிட்டா.. போலீஸ்காரர் மீது பேராசிரியை பரபரப்பு புகார்.!

Published : May 30, 2022, 12:20 PM IST
ஊர் ஊராக அழைத்து சென்று ரூம் போட்டு என்ன நாசம் செஞ்சிட்டா.. போலீஸ்காரர் மீது பேராசிரியை பரபரப்பு புகார்.!

சுருக்கம்

சிறையில் போலீஸ்காரராக வேலை பார்த்த ரவிக்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் சிறை குடியிருப்பிலேயே வசித்து வந்தார். நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அவர் என்னை பொள்ளாச்சி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றார்.

மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியையை ஊர் ஊராக அழைத்து சென்று ஆசைவார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு ஏமாற்றிவிட்டதாக போலீஸ்காரர் மீது பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த 29 வயது இளம்பெண் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில், நான் கோவையில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். எனது தந்தை கோவை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக வேலை பார்த்து வருகிறார். நாங்கள் சிறை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தோம். அப்போது சிறையில் போலீஸ்காரராக வேலை பார்த்த ரவிக்குமார் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரும் சிறை குடியிருப்பிலேயே வசித்து வந்தார். நாங்கள் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. அவர் என்னை பொள்ளாச்சி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றார்.

அப்போது அந்த பகுதிகளில் அறை எடுத்து தங்கினோம். அப்போது ரவிக்குமார் என்னிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார். இந்நிலையில், கடந்த 2020ம் ஜூன் மாதம் அவர் திருப்பூருக்கு மாறுதலாகி சென்றார். இதனையடுத்து நான் அவரிடம் திருமணம் செய்ய வற்புறுத்தினேன். இதனை தொடர்ந்து நாங்கள் கடந்த மார்ச் 28ம் தேதி பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.

பின்னர் நாங்கள் அவரவர் வீட்டில் வசித்து வந்தோம். நான் அவரிடம் வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறினேன். அவர் அழைத்து செல்ல மறுத்து விட்டார். மேலும் என்னுடைய செல்போன் எண்ணையும் பிளாக் செய்து விட்டார். விசாரித்த போது அவர் என்னை ஏமாற்றி விட்டு அவரது பெற்றோர் துண்டுதலின் பேரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தது தெரிய வந்தது. இது குறித்து நான் கேட்ட போது கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள்.

எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றி உல்லாசமாக இருந்து விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்யும் போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். புகாரின் பேரில் போலீஸ்காரர் ரவிக்குமார் அவரது பெற்றோர் ஆகியோர் மீது கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- நண்பன்தானே என நம்பிச் சென்ற இளம்பெண்.. வாயில் துணியை வைத்து பொத்தி தோப்புக்குள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.!

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்