மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. கூவி கூவி உல்லாசத்துக்கு அழைத்த பெண்கள்.!

Published : Dec 02, 2021, 09:02 AM IST
மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற விபச்சார தொழில்.. கூவி கூவி உல்லாசத்துக்கு அழைத்த பெண்கள்.!

சுருக்கம்

கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர்.

கோவை பேருந்து நிலையம் அருகே அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? அழைத்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, பெண் புரோக்கர்கள் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ்  சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், இதை உறுதிப்படுத்தும் விதமாக கோவை சுந்தராபுரம் எல்.ஐ.சி காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று 2 பெண்கள் நின்று கொண்டு அந்த வழியாக வரும் ஆண்களிடம் எங்களிடம் அழகான இளம்பெண்கள் உள்ளனர். அவர்களிடம் உல்லாசம் அனுபவிக்க விரும்புகிறீர்களா? என விபசாரத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஒருவர் இதுகுறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து நோட்டமிட்டனர். இதனையடுத்து, அங்கு நின்றிருந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபச்சார புரோக்கர்களான குறிச்சி கல்லுக்குழியை சேர்ந்த பிரேமா(58), பவித்ரா(43) ஆகிய 2 பேரை கைது செய்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 38 வயது பெண் ஒருவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோன்று கோவை சரவணம்பட்டி அருகே உள்ள பேருந்து நிறுத்தம் அருகே காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் அங்கு வரும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளனர். இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு இருந்த விபச்சார புரோக்கர்கள் கோவை ரத்தினபுரியை சேர்ந்த சந்திரசேகர்(38),  ரம்யா(31) ஆகியோரை கைது செய்தனர். விபசாரத்துக்கு ஈடுபடுத்தப்பட்ட பெங்களூரை சேர்ந்த பெண் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோரை மீட்டு போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்து காரை பறிமுதல் செய்தனர். 

PREV
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?