ஃபேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் எல்லாம் நரகத்திற்குத்தான் போவார்கள்... சபிக்கும் வைரல் வீடியோ..!

By Thiraviaraj RMFirst Published Dec 1, 2021, 7:07 PM IST
Highlights

ஒழுக்கமான பெண், அல்லாவுக்கு மிக மிக பிடித்தமான ஒரு பெண், இப்படிப்பட்ட பெண் நரகத்திற்கு செல்வார்களா? 

ஃபேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் எல்லாம் நரகத்திற்குத்தான் போவார்கள் என இஸ்லாமியர் ஒருவர் சபிக்கும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அந்த வீடியோவில், ‘’ஒரு பெண் சரியான பாதையில் பயணிக்கும் ஒரு பெண். இறையச்சமுள்ள பெண், ஹிஜாப் பரதக்கலை பயன்படுத்த கூடிய ஒரு பெண், அல்லாவுக்கு பயந்து தனது கணவருக்கு, குடும்பத்திற்கு ,பிள்ளைகளுக்கு உரிய கடமைகளை செய்யக்கூடிய ஒரு பெண், தனது மாமியார், மாமனாருக்கு உரிய கடமைகளைச் செய்யக்கூடிய ஒரு பெண், தன் தாய், தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்ய கூடிய ஒரு பெண், ஒழுக்கமான பெண், அல்லாவுக்கு மிக மிக பிடித்தமான ஒரு பெண், இப்படிப்பட்ட பெண் நரகத்திற்கு செல்வார்களா? 

தர்மம் செய்து ஞாயம் செய்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் ஒழுக்கமாக இருக்கும் ஒரு பெண் நரகத்திற்கு செல்வாரா? எல்லா நல்ல குணங்களும் இருந்தாலும் அவள் நரகத்திற்கு செல்வாள். எப்படி பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்தால் நரகத்திற்கு செல்வது உறுதி. அவள் எத்தனை ஒழுக்கத்தில் சரியாக இருந்தாலும் சரி, பேஸ்புக் மட்டும் இருந்தால் நரகத்துக்கு செல்வது உறுதி. ஆக தாய்மார்களே நல்ல குடும்ப பெண்களுக்கு ஃபேஸ்புக் தேவையில்லை. இன்ஸ்டாகிராம் தேவையில்லை.

மற்ற சமூக வலைதளங்கள் தேவையில்லை. நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். எனது வார்த்தை கடினமான வார்த்தைகளாக இருக்கலாம். ஆனால் இதுதான் சத்தியம் தாய்மார்களே. ஒரு பெண் பேஸ்புக்கில் இருந்து தனது புகைப்படத்தை பகிர்ந்து குடும்ப உறுப்பினர் போட்டோ போட்டு தனது கணவரின் போட்டோவை போட்டு இதற்கு லைக் வரவேண்டும்  நினைக்கும் பெண்கள் தவறானவர்கள். பிறரிடமிருந்து லைக் வாங்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் ஏற்கனவே விவச்சாரம் செய்த பெண்கள். 

ஆயிரம் வருடம் பின்தங்கி மூளைவளர்ச்சி குன்றியிருக்கும் இந்த கோமாளியின் பேச்சுக்கு என்ன ஏம்பா tag பன்றிங்க 🙄
என் தந்தை பெயர் முகமதலி என்பதலேயே எனக்கும் அவருக்கும் சம்பந்தம் கற்பிக்கும் உங்கள் மடமையை என்னவென்று சொல்ல
pic.twitter.com/Yf3SsvFgrP

— Naveen Mohamedali (@NaveenFilmmaker)

 

வருங்காலத்தில் விபச்சாரம் செய்யும் பெண்ணாக மாறுவாள். பேஸ்புக் உருவாக்கப்பட்டதே பெண்களுடைய மானத்தை வாங்கத்தான். கண்ட கண்டவர்கள் எல்லாம் பெண்களை பார்த்து ரசிப்பதற்காகத்தான் பேஸ்புக் உருவாக்கப்பட்டது’’ என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

click me!