தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். தங்கைக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் சொத்து தனக்கு கிடைக்கும் அண்ணன் முருகேசன் ஆசை ஆசையாக இருந்து வந்துள்ளார்.
சொத்து தகராறு காரணமாக தங்கை மற்றும் அவரது கணவரை ஓட ஒட விரட்டி அண்ணனே படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தால் பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். தங்கைக்கு குழந்தை இல்லாததால் அவர்கள் சொத்து தனக்கு கிடைக்கும் அண்ணன் முருகேசன் ஆசை ஆசையாக இருந்து வந்துள்ளார். ஆனால், அவரது ஆசையில் மண் விழுந்தது.
இதையும் படிங்க;- மாணவிகள் பாத்ரூம் அருகே நின்று கொண்டு ஆபாச சைகை... டார்ச்சர் கொடுத்த டீச்சருக்கு சரியான ஆப்பு..!
இந்நிலையில், பெண் குழந்தையை தங்கை தடுத்தெடுத்து வளர்த்து வந்ததால் முருகேசன் ஆத்திரமடைந்தார். இதனால், தங்கை மற்றும் அவரது கணவரின் வீட்டுக்கு சென்று முருகேசன் அவரது மகன் மகேஷ் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஆத்திரமடைந்த முருகேசன் மாரியம்மாளின் கண்ணிலும், அவரது கணவர் ராம்குமாரின் கண்ணிலும் மிளகாய் பொடி தூவி அரிவாளால் சரமாரியாக இருவரும் சேர்ந்து வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து தந்தையும், மகனும் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தந்தை, மகனை தேடி வருகின்றனர். சொத்துக்காக தனது சகோதரி மற்றும் அவரது கணவரையும் அண்ணன் படுகொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- வகுப்பறையில் முனகல் சத்தம்.. எட்டிப்பார்த்த மாணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!