விபசார பெண்ணின் அழகில் மயங்கி விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக கூறுபோட்ட நபர்கள்

By Velmurugan s  |  First Published Apr 10, 2023, 7:38 PM IST

சென்னை அருகே விபசார பெண்ணின் அழகில் மயங்கிய இருவருடன் சேர்ந்து பெண் தனது கணவரை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெயந்தன். சென்னையில் உள்ள தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி இவர் தனது சகோதரியிடம் விழுப்புரத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றநிலையில், மீண்டும் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக ஜெயந்தனின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினரும் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜெயந்தன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாக்கியலட்சுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே பாக்கியலட்சுமி விபசார தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதனையும் ஏற்றுக் கொண்டு தான் ஜெயந்தன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திருமணமான சில நாட்டிகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

தனியாக சென்ற பெண்ணிடம் கேலி பேச்சு; தட்டிக்கேட்ட கணவனை குத்தி கொன்ற கஞ்சா சிறுவன்

அவ்வபோது ஜெயந்தன் மட்டும் சேர்ந்து வாழ வருமாறு பாக்கிய லட்சுமியை அழைப்பாராம். அது போல் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பும் ஜெயந்தன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு பாக்கியலட்சுமியை அழைத்துள்ளார். அதற்கு அவர் வழக்கம் போல் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஜெயந்தன் தொடர்ந்து தன்னை தொல்லை செய்து வருவதால் இதற்கு முடிவுகட்ட பாக்கியலட்சுமி திட்டம் தீட்டியுள்ளார்.

அதன் படி ஜெயலட்சுமி, தனது ஆண் நண்பர் சங்கருடன் இணைந்து ஜெயந்தனை கொலை செய்துள்ளார். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி இருவரும் எரித்துள்ளனர். இதில் பாதி எரிந்த நிலையில் இருந்த உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி கோவளத்தில் உள்ள பூமிநாத சுவாமி கோவில் பூசாரி வேல்முருகன் துணையுடன் அருகில் உள்ள குட்டையில் வீசியுள்ளார்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; ஆர்.கே.சுரேஷ்க்கு வலை வீச்சு

இச்சம்பவம் நடைபெற்று ஒருமாதமான நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தி பாக்கிலட்சுமியை கைது செய்தனர். கொலை குறித்து ஏற்கனவே பூசாரி வேல்முருகனிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதால் சுதாரித்துக்கொண்ட பூசாரி தற்போது தலைமறைவாகியுள்ளார். அதே போன்று சங்கரும் தலைமறைவாகியுள்ளார். இவர்கள் இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!