பட்டப் பகலில் ஆட்டோவில் சென்ற பெண் படுகொலை; ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்

Published : Apr 10, 2023, 06:40 PM IST
பட்டப் பகலில் ஆட்டோவில் சென்ற பெண் படுகொலை; ஓட்டுநர் மீது கொலைவெறி தாக்குதல்

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்ட பகலில் ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாக தாக்கிவிட்டு ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகராஜ் ( வயது 33) சொந்தமாக ஆட்டோ ஓட்டி வாழ்கிறார்.  இவர் இன்று அதிகாலை தனது ஆட்டோவில் வானரமுட்டியில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை கட்டராங்குளத்திற்கு ஏற்றிச் சென்றுள்ளார். 

வானரமுட்டி - கட்டராங்குளம் இடையே காளம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை வழிமறித்த மர்ம நபர்கள் ஆட்டோவில் இருந்த பெண்ணை வெட்டி படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் சண்முகராஜை அந்த கும்பல் தலையில் பலமாக தாக்கியுள்ளனர். 

தனியாக சென்ற பெண்ணிடம் கேலி பேச்சு; தட்டிக்கேட்ட கணவனை குத்தி கொன்ற கஞ்சா சிறுவன்

இதில் ஆட்டோ ஓட்டுநர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்த பிறகு ஆட்டோ ஓட்டுநர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த ஆட்டோ ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து நாலாட்டின்புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரம்; ஆர்.கே.சுரேஷ்க்கு வலை வீச்சு

விசாரணையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண் கட்டராங்குளத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி வெள்ளைத்துரைச்சி (30) என்பது தெரிய வந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!