கல்லூரி மாணவர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை..! கடலூரில் பரபரப்பு..!

Published : Mar 17, 2020, 05:07 PM IST
கல்லூரி மாணவர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை..! கடலூரில் பரபரப்பு..!

சுருக்கம்

சந்தேகத்தின் அடிப்படையில் ஜோசப் வசித்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவலர்களின் கிடுக்குபிடி கேள்வியில் ஜோசப்பை கொலை செய்த அதிர்ச்சி தகவலை இருவரும் கூறியுள்ளனர். ஜோசப்பை காரைக்காடு பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள் மது அருந்த வைத்து போதையில் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின் உடலை உப்பனாற்றில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

கடலூரைச் சேர்ந்தவர் தினேஷ் பெஞ்சமின். இவரது மனைவி பிரதீபா. இந்த தம்பதியினருக்கு ஜெய்வின் ஜோசப்(18) என்கிற மகன் இருந்துள்ளார். அங்கிருக்கும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜோசப் படித்து வந்தார். கடந்த 4ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோசப் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.  அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் அவரை தேடிப் பார்த்துள்ளனர். ஜோசப்பை எங்கும் காணாத நிலையில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவலர்கள் ஜோசப்பை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஜோசப் வசித்த அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவலர்களின் கிடுக்குபிடி கேள்வியில் ஜோசப்பை கொலை செய்த அதிர்ச்சி தகவலை இருவரும் கூறியுள்ளனர். ஜோசப்பை காரைக்காடு பகுதிக்கு அழைத்து சென்ற அவர்கள் மது அருந்த வைத்து போதையில் அவரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின் உடலை உப்பனாற்றில் குழிதோண்டி புதைத்துள்ளனர்.

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்..!

அவர்கள் அளித்த தகவலின்படி ஜோசப்பின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜோசப் கொலை செய்யப்பட்டதை கேள்வியுற்று அவரது குடும்பத்தினர் கதறி துடித்தனர். ஜோசப் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்கிற விபரங்கள் வெளிவரவில்லை. அதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!