கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!

Published : Mar 16, 2020, 03:01 PM IST
கள்ளக்காதலனுடன் கட்டிலில் வெறி தீர உல்லாசம்... நேரில் பார்த்ததால் பெற்ற மகனுக்கு தாய் கொடுத்த பரிசு..!

சுருக்கம்

களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை சேர்ந்தவர் வசந்தா (49). இவர் கணவர் மோகனை பிரிந்து வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்களும், லால் மோகன் (13) என்ற மகனும் இருந்தனர். லால் மோகன் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தான். சிறுவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தாய் வசந்தா களியக்காவிளை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். 

கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதை பார்த்த பெற்ற மகனை கொன்ற தாயை, 4 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர். மேலும், கைதான தாய் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை சேர்ந்தவர் வசந்தா (49). இவர் கணவர் மோகனை பிரிந்து வசித்து வந்தார். இவருக்கு 2 மகள்களும், லால் மோகன் (13) என்ற மகனும் இருந்தனர். லால் மோகன் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தான். சிறுவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தாய் வசந்தா களியக்காவிளை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஆனால், வசந்தாவின் கணவர் மோகன் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் காயம் இருந்ததும், தொண்டையில் தூக்க மாத்திரை சிக்கியிருந்ததும் தெரியவந்தது.

இதையும் படிங்க;-  எடப்பாடியார் பயத்தால்தான் ரஜினி அரசியலுக்கு வர தயங்குகிறார்... நக்கலடிக்கும் நமது அம்மா நாளிதழ்..!

இதனையடுத்து, மகனின் தாயிடம் போலீசார் கிடுக்கிடுப்படி விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில், எனக்கும், சுபணனுக்கும் நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்தது. இதை அறிந்த கணவன் மோகன் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன்பின்பு, நாங்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம். கடந்த 2016-ம் ஆண்டு நானும், சுபணனும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை மகன் லால் மோகன் நேரில் பார்த்து விட்டான். 

இதையும் படிங்க;- பெரும்பான்மையான இந்துக்கள் ஒன்றுபட்டால் என்ன ஆகும் தெரியுமா.? முஸ்லிம்களுக்கு எதிராக கொந்தளித்த புதிய தமிழகம்

இதுகுறித்து அவன் வெளியே சொன்னால் அவமானமாகி விடும் என அச்சப்பட்டோம். மகன் என்றும் பாராமல் அவனின் வாயில் தூக்க மாத்திரையை திணித்து விழுங்க வைத்தோம். தொடர்ந்து, நாயை கட்டி போடும் சங்கிலியால் நானும், சுபணனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றோம். தூக்க மாத்திரையை தின்று தற்கொலை செய்ததாக நாடகமாடினோம். மேலும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு மகளை ரகசியமாக திருமணம் செய்து கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வசந்தாவும், சுபணனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!