பால்வாடி படிக்கும்போது கொடுத்தே பூந்தி.. 8வது படிக்கும் போதே எடுக்க வச்சே வாந்தி.. கானா பாடகரை தேடுது போலீஸ்.

Published : Dec 23, 2021, 10:46 AM ISTUpdated : Dec 23, 2021, 10:54 AM IST
பால்வாடி படிக்கும்போது கொடுத்தே பூந்தி.. 8வது படிக்கும் போதே எடுக்க வச்சே வாந்தி.. கானா பாடகரை தேடுது போலீஸ்.

சுருக்கம்

சிறுமியை கர்பமாக்குவேன் என்ற அர்த்ததில் கானாப்பாடல் பாடி வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். நாட்டுப்புறப் பாடல்களைத் தொடர்ந்து தற்போது கானாப் பாடல்களும் திரைப்படங்களில் இடம்பிடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

சிறுமியை கர்பமாக்குவேன் என்ற அர்த்ததில் கானாப்பாடல் பாடி வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். நாட்டுப்புறப் பாடல்களைத் தொடர்ந்து தற்போது கானாப் பாடல்களும் திரைப்படங்களில் இடம்பிடித்து பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குறிப்பாக பல கானாக் கலைஞர்கள் அரசியல், சமூகக் கருத்து போன்ற ஆரோக்கியமான கானாப் பாடல்களை பாடி வருவது சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு சரவெடி சரண் மற்றும் டோனி ராக் ஆகிய இரு கானாப் பாடகர்கள் பாடி வெளியான விடீயோ வெளியானது. 

அந்த பாடலில் சரவெடி சரண் என்பவர் பாடும் பாடல் வரிகள் தரக்குரைவான வகையில் சிறுமியை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக சிறுமியை கர்பமாக்குவேன் என்ற அர்த்தத்தில் கானாப் பாடகர் சரவெடி சரண் பாடியுள்ள பாடல் வரிகளுக்கு எதிராக கண்டனக் குரல்கள் கிளம்பியதுடன் சமூக வலைதளங்களில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் கவனத்திற்குச் சென்ற நிலையில், இப்பாடலைப் பாடிய இளைஞர் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும், சிறார்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நடக்க தூண்டுபவர்களையும் போக்சோச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவு 16-ஐ அனைவரும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் எனவும் திருவள்ளூர் எஸ்.பி வருண் குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே இப்பாடலைப் பாடிய கானாப் பாடகர் சரவெடி சரண் என்பவரின் வீடு சென்னை பூக்கடைப் பகுதியில் உள்ள நிலையில், சரவெடி சரணைப் பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள பூக்கடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சரவெடி சரண் அவரது வீட்டில் இல்லாத காரணத்தால் அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!