கோயில் வாசலில்.. சாமியார் வேடத்தில் கஞ்சா.. ஸ்கெட்ச் போட்டு போலீ சாமியரை தூக்கிய போலீஸ்.

Published : Dec 22, 2021, 05:50 PM IST
கோயில் வாசலில்.. சாமியார் வேடத்தில் கஞ்சா.. ஸ்கெட்ச் போட்டு போலீ சாமியரை தூக்கிய போலீஸ்.

சுருக்கம்

போலீசார் விசாரணையில் தாமு(எ) சேகர் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு அப்பகுதி அப்பாவி மக்களுக்கு குறி சொல்வது போல கஞ்சா விற்பனையில் சில ஆண்டுகளாக ஈடுப்பட்டு வந்துள்ளார்.  

சாமியார் வேடத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த போலீ சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பாவி மக்களிடம் குறி சொல்வது போல அந்த நபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த போலீசாமியாருக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருபுறம் அரசு அனுமதியுடன் டாஸ்மார்க்.. மறுபுறம் இலை மறை காயாக கஞ்சா விற்பனை என சென்னை மாநகரில் போதை பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறக்கிறது. ஆந்திராவில் இருந்து ரயில்களில் கடத்தி வரப்பட்டு, சொகுசு கார்கள் மூலமாகவும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பாழடைந்த கட்டிடங்கள், ஒதுக்குபுறங்கள் போன்றவை சமூக விரோதிகள் கூடாரமாக செயல்பட்டு வருவதுடன் அந்த இடங்கள் கஞ்சா மையங்களாக செயல்பட்டு வருகின்றன. 

சென்னையில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் ஒருகையில் மதுபாட்டில்கள் மறுகையில் கஞ்சாவுடன் வலம் வருவதை காண முடிகிறது. கல்லூரி மாணவர்கள், படிப்பை பாதியில் கைவிட்டவர்கள், வேலை இல்லாத இளைஞர்கள், வடமாநில தொழிலாளர்கள், ஆட்டோ, கால்டாக்சி டிரைவர்கள் என பல தரப்பினரும் கஞ்சாவுக்கு அடிமையாகி கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. தினந்தோறும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கஞ்சா பறிமுதல் செய்யப்படுவதுடன், விற்பனையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். ஆனால் பல இடங்களில் காவல் துறைக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், அவர்களுடன் மாமூல் வாங்கிக்கொண்டு போலீசார் அதை கண்டு கொள்வதே இல்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்து வருகிறது. கஞ்சா போதை அதிகரித்ததால்தான் ஆங்காங்கே குற்றச் செய்திகள், கொலைகள் சர்வசாதாரணமாக நடக்கிறது என்றும், இதற்கு கஞ்சா போதையே காரணம் என்றும் கூறப்படுகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனை என்பது சகஜமாகவும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே முட்டு சந்துகளில், போலீஸ் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் ஆட்டோக்களில் வைத்து கஞ்சா வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. எப்போதையும் விட நாளுக்கு நாள் கஞ்சா அதிகரித்துவிட்டதை உணர்ந்த திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அருண் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் அளித்தால், 10,000 ரொக்கம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஒருபறம் சில காவல் அதிகாரிகள் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் பல இடங்களில் அதை போலீசார் பெரிதாக கண்டுகொள்ளவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில்தான் ராயப்பேட்டை, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் பகுதியில் மக்களுக்கு குறிசொல்லும் சாமியார் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் மைலாப்பூர் தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்த தாமு(எ) சேகர்(50) என்பவரை கஞ்சா வாங்குவது போல சென்று கைது செய்தனர். 

போலீசார் விசாரணையில் தாமு(எ) சேகர் சாமியார் வேடம் போட்டுக்கொண்டு அப்பகுதி அப்பாவி மக்களுக்கு குறி சொல்வது போல கஞ்சா விற்பனையில் சில ஆண்டுகளாக ஈடுப்பட்டு வந்துள்ளார். மேலும், கஞ்சா விற்பது குறித்து யாருக்கு சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக சாமியார் வேடம் அணிந்து சாமியாராக வலம் வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக தாமு(எ) சேகர் கோவில்கள் அருகில் மாலை நேரங்களில் அமர்ந்து ஆடைக்குள் மறைத்து கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார். மேலும், தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்த ராஜா(55) மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் தர்மராஜபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி(41) ஆகியோர் மொத்தமாக கஞ்சாவை வாங்கி வந்து சாமியார் வேடமணிந்த தாமுவிடம் கொடுத்து விற்பனை செய்ய சொல்லி வந்தததும் தெரிய வந்தது.இதனையடுத்து தேனியைச் சேர்ந்த ராஜா மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசைதம்பி ஆகியோரை கைது செய்த தனிப்படை போலீசார் இவர்களிடம் இருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!