சென்னையில் பயங்கரம்.. பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. குழந்தை பிறந்ததால் அம்பலம்..!

Published : Dec 22, 2021, 11:37 AM IST
சென்னையில் பயங்கரம்.. பெற்ற மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூர தாய்.. குழந்தை பிறந்ததால் அம்பலம்..!

சுருக்கம்

சென்னை கொருக்குப்பேட்டை மோட்சபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சென்னை கொருக்குப்பேட்டையில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த சம்பவத்தில் அவருடைய தாயும், அவரது கள்ளக்காதலனும் போச்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை கொருக்குப்பேட்டை மோட்சபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, 11ம் வகுப்பு வரை படித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சிறுமியிடம் விசாரித்தபோது, கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்த துரைராஜ் (51), பஷீர் ஜமால் ஆகியோர் என்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தனர்.

இதனால், கர்ப்பமான எனக்கு குழந்தை பிறந்தது. இதற்கு எனது தாய் மேரியும் (39) உடந்தையாக இருந்தார். எனவே, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் கதறியபடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தாய், துரைராஜ் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். இதில், சிறுமியின் தாய் மேரிக்கும், தாமோதரனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும்போது சிறுமியிடம் அவர் தவறாக நடந்துள்ளார்.

சிறுமியை பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தியுள்ளனர். மேலும் துரைராஜ், பஷீர்ஜமால் உள்ளிட்ட 3 பேர் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து, சிறுமியின் தாய் மேரி, துரைராஜ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெற்ற தாயே மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய ச்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!