பெட்ரோல் குண்டு வீசி தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி! தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published Dec 2, 2022, 8:54 AM IST

கடந்த 21ம் தேதி அதிகாலை நேரத்தில் வெடி சத்தம் கேட்டுள்ளது. அப்போது, வீட்டு வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில்  கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 


ஊருக்குள் பிரபலமாக வேண்டும் என்பதால் தனது வீட்டிலேயே பெட்ரோல் குண்டு வீசி, போலீசில் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி சக்கரபாணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் வசித்து வரும் சக்கரபாணி(38). கடந்த 5 ஆண்டுகளாக கும்பகோணம் இந்து முன்னணி மாநகர செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி அதிகாலை நேரத்தில் வெடி சத்தம் கேட்டுள்ளது. அப்போது, வீட்டு வாசலில் பெட்ரோல் பாட்டில் திரியுடன் உடைந்த நிலையில்  கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Latest Videos

இதையும் படிங்க;- அடப்பாவி! ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. விபத்து போல் நாடகமாடியது அம்பலம்.!

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பெட்ரோல் குண்டு வீசியது யார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் தேடினர். இறுதியில் தனது பெயர் பரபரப்பாக பேச வேண்டும் என்பதற்காக சொந்த வீட்டிலேயே சக்கரபாணி பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.

இதனையடுத்து, சக்கரபாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், இந்து முன்னணி இயக்க நிர்வாகி சக்கரபாணி மீது தற்போது குண்டர் சட்டம் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்.. கள்ளக்காதலி சொன்ன உடனே கணவர் என்ன செய்த பகீர் சம்பவம்!

click me!