அடப்பாவி! ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. விபத்து போல் நாடகமாடியது அம்பலம்.!

By vinoth kumar  |  First Published Dec 1, 2022, 2:13 PM IST

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி. கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஷாலு தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. 


ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்கான மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்து விட்டு விபத்து என நாகமாடிய கணவர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி. கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி ஷாலு தனது உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது, பின்னால், அதிவேகத்தில் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் விபத்து என்பது தெரியவந்ததை வழக்கை முடித்து வைத்தனர். ஆனால், கணவர் நடவடிக்கையில் போலீசாருக்கு சிறிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?

இதனிடையே, மனைவி லாலு தேவி  மரணம் அடைந்தால் அவரது பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணமான ரூ.1.90 கோடியை மகேஷ் சந்த் பெற்றார். இதை அறிந்த போலீசார்  விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினர். அவரது வீட்டின் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இருசக்கர வாகனத்தில் மனைவி சென்றதும் சிறிது தூரம் நின்றுக்கொண்டிருந்த காரில் இருந்தவர்களிடம் மகஷே் சந்திரா ஏதோ சொல்லிவிட்டு வரும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

இதனையடுத்து, கணவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவி ஷாலுவை திட்டமிட்டு அவரது கணவர் மகேஷ் சந்த் படுகொலை செய்ததும் தெரியவந்தது. தனது மனைவி பெயரில் இருந்த காப்பீட்டு தொகையை பெறுவதற்காக திட்டவிட்டு கொலை செய்துவிட்டு சாலை விபத்து போல் நாடகமாடியது தெரியவந்தது. கூலிப்படை மூலம் அவர் மனைவியை கார் ஏற்றி கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க;-  உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்.. கள்ளக்காதலி சொன்ன உடனே கணவர் என்ன செய்த பகீர் சம்பவம்!

click me!