இளைஞர் வெட்டி படுகொலை.. வெறி தீராததால் தலையை மட்டும் தனியாக எடுத்து சென்ற கொடூர கும்பல்.. சிவங்கையில் பயங்கரம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார். அவரது மகன் ராமன்(27). நேற்று வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

youth Brutal murder in Sivaganga

சிவகங்கை அருகே இளைஞரை கண்மாயில் வெட்டி கொன்று விட்டு வெறி தீராததால் மர்ம கும்பல் தலையை மட்டும் வெட்டி எடுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  உள்ள செங்கோட்டை பகுதியை சேர்ந்த செந்தில்குமார். அவரது மகன் ராமன்(27). நேற்று வெளியே சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து,  பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

Latest Videos

இதையும் படிங்க;- உன் மனைவி உயிரோடு இருக்கும் வரை நமக்கு தொல்லை தான்.. கள்ளக்காதலி சொன்ன உடனே கணவர் என்ன செய்த பகீர் சம்பவம்!

இந்த புகாரின் அடிப்படிடையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, அப்பகுதியில் உள்ள கண்மாயில் தலை இல்லாத ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை செய்தில் கொலை செய்யப்பட்டவர் காணாமல் போன ராமன் என்பது தெரியவந்தது. பின்னர், அவரது உடலை கைப்பற்றிய போலீசார் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

கொலை கும்பல் தலையை அப்பகுதியில் எங்கையாவது வீசி சென்றுள்ளார்களா என தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இளைஞரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றுவிட்டு, உடலை மட்டும் வீசிச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;-  ஓவர் நடிப்பு உடம்புக்கு ஆகாது.. கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி.. போலீசில் வசமாக சிக்கியது எப்படி?

vuukle one pixel image
click me!
vuukle one pixel image