இருதரப்பினர் இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

Published : Dec 01, 2022, 10:26 PM ISTUpdated : Dec 02, 2022, 05:50 PM IST
இருதரப்பினர் இடையே அடிதடி… ஒரு தரப்புக்கு கத்தி குத்து.. சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு!!

சுருக்கம்

கோவை அருகே தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை அருகே தந்தை மகன் ஆகியோர் எதிர்தரப்பினரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துகள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநகர காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் போதை பொருட்களின் புழக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சுங்கம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர் ஒருவர் எதிர்தரப்பினரை கத்தியால் குத்தும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இளைஞர் வெட்டி படுகொலை.. வெறி தீராததால் தலையை மட்டும் தனியாக எடுத்து சென்ற கொடூர கும்பல்.. சிவங்கையில் பயங்கரம்

சுங்கம் புறவழிச் சாலை சிவராம் நகர் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகன் முகேஷ், தந்தை ஆறுமுகம் முகேஷின் சகோதரர் முத்துக்குமார் ஆகியோர் அதே பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மற்றும் ரமேஷ் ஆகியோரை கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் போலீசார் தாக்குதல் நடத்திய முகேஷ் மற்றும் தந்தை ஆறுமுகத்தை கைது செய்தனர். 

இதையும் படிங்க: அடப்பாவி! ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. விபத்து போல் நாடகமாடியது அம்பலம்.!

அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் முகேஷ் கத்தியால் குத்துவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.மேலும் தலைமறைவாக உள்ள முகேஷின் அண்ணன் முத்துக்குமாரை ராமநாதபுரம் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!