
சென்னை, அண்ணா நகரை சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு வயது 40. இவர் சென்னை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், ‘தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் எனது தந்தை சக்திவேல் தாயாருடன் வசித்து வருகிறார். எனது தந்தையின் வீட்டில் கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கையை சேர்ந்த வாலிபர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
அவர் எனது தந்தையிடம் குடும்ப கஷ்டங்களை கூறி ரூபாய் 25 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பின்னர் அந்த தொகையை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த பத்தாம் தேதி எனது தந்தையிடம் தனக்கு வெளிநாட்டு வசிக்கும் சிலர் பணம் தர வேண்டியுள்ளது. நீங்கள் என்னுடன் வெளிநாட்டிற்கு வந்தால் அவர்களிடம் பணத்தை வாங்கித் தருகிறேன். பின்னர் இருவரும் வெளிநாட்டை சுற்றி பார்த்து விட்டு வரலாம் எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
இதனை நம்பி எனது தந்தை சக்திவேல் உக்கரைன் அருகே உள்ள ஒரு நாட்டிற்கு அந்த வாலிபருடன் சென்றுள்ளார். அங்கு வந்த வாலிபர் எனது தந்தையை அந்த நாட்டை சேர்ந்தவரிடம் ரூபாய் ஏழுலட்சத்திற்கு அடமானமாக வைத்துவிட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில் எனது தந்தை வாட்சப் மூலம் என்னை தொடர்பு கொண்டு தன்னை பணத்திற்காக அடமானம் வைத்து விட்டதாகவும், பணம் கொடுத்தால்தான் தன்னை விடுவிப்பார்கள்.
எனவே எனது வங்கிக் கணக்கில் ரூபாய் 7 லட்சம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார் . னவே எனது தந்தையை மீட்டு தருவதோடு அவரை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !