இதற்காக தான் பஞ்சாயத்து தலைவரை துடிதுடிக்க கொன்றோம்.. கைதான பாஜக நிர்வாகி, மாணவன் பரபரப்பு வாக்குமூலம்.!

Published : Aug 24, 2022, 07:25 AM ISTUpdated : Aug 24, 2022, 07:26 AM IST
இதற்காக தான் பஞ்சாயத்து தலைவரை துடிதுடிக்க கொன்றோம்.. கைதான பாஜக நிர்வாகி, மாணவன் பரபரப்பு வாக்குமூலம்.!

சுருக்கம்

கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் (65). இவர் நேற்று முன்தினம் தோட்டத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

தூத்துக்குடியில் பஞ்சாயத்து தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி, மாணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் (65). இவர் நேற்று முன்தினம் தோட்டத்தில் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். 

இதையும் படிங்க;- வேளாங்கண்ணிக்கு நடைபயணம் சென்ற சென்னை கல்லூரி மாணவர் நடுரோட்டில் வெட்டி படுகொலை..!

விசாரணையில் தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சேர்ந்த கார்த்திக் (33), காளிதாஸ் மகன் வசந்த் (18) ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கார்த்திக் கோவில்பட்டி வடக்கு ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார். வசந்த் கோவில்பட்டியில் ஐடிஐயில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரண் அடைந்தனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் 2 பேரும் போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்;- கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி தெற்கு திட்டங்குளம் பஞ்சாயத்தில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தெற்கு திட்டங்குளத்தில் கழிப்பறை கட்டப்பட்டு, திறக்கப்படாமல் உள்ளது. இதை திறக்க வேண்டும் என்றும், திட்டங்குளம் கண்மாயில் முட்புதர்கள் அதிகமாக உள்ளதால், அவைகளை அகற்ற வேண்டும் என்றும், திட்டங்குளம் பஸ் நிறுத்தத்தில் அனைத்து பஸ்களும் அடைந்தோம். நின்று செல்ல அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தோம்.

எங்களது கோரிக்கைகள் 'மினிட்' புத்தகத்தில் ஏற்றப்பட்ட நிலையில், எனது (கார்த்திக்) லெட்டர் பேடில் அந்த கோரிக்கைகளை மனுவாக எழுதி, பஞ்சாயத்து தலைவரிடம் கையெழுத்து வாங்குவதற்காக அவரது அலுவலகத்திற்கு சென்றோம். அவர் அங்கு இல்லை. தோட்டத்திற்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். அதன்பின்னர் தோட்டத்திற்கு சென்றோம். அங்கு அவரிடம் மனுவில் கையெழுத்து கேட்டோம். அவர் போட மறுத்ததோடு, எங்களை அவதூறாக பேசினார். அவருக்கும், எங்களுக்கும் தகராறு ஏற்படவே, தோட்டத்தில் வைத்திருந்த அரிவாளால் எங்களை வெட்ட ஆக்ரோஷத்தோடு வந்தார்.

இதையும் படிங்க;-  9 வருஷமாக கணவனால் கர்ப்பம் ஆகாத மனைவி கள்ளக்காதலனால் கர்ப்பம்..! இறுதியில் நடந்த பகீர் சம்பவம்..!

இதை எதிர்பார்க்காத நாங்கள், சுதாரித்துக் கொண்டு, அவரை கீழே தள்ளிவிட்டோம். இதில் அரிவாள் அவரது பிடியிலிருந்து நழுவி கீழே விழுந்தது. அதைக் கைப்பற்றி அவரை வெட்டிக் கொன்றோம். பின்னர் கோவில்பட்டி கிழக்கு போலீசில் சரண் அடைந்தோம் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையே பொன்ராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத் துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இன்று 2வது நாளாக வாங்க மறுத்து பொன்ராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?