12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு புகார்.. அதிர்ச்சி சம்பவம்

Published : Aug 23, 2022, 09:49 PM IST
12 வயதில் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி.. 30 ஆண்டுகளுக்கு பிறகு புகார்.. அதிர்ச்சி சம்பவம்

சுருக்கம்

உத்தர பிரதேசத்தில் நடைப்பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ஷாஜகான்பூரை சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஒருவர் 30 வருடங்களுக்கு முன்னர் சில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யபட்டார். இதனால் சிறுமி கருவுற்றார். பிறகு அந்த சிறுமிக்கு கருக்கலைப்பு செய்தால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே மருத்துவர்கள் கூறியதால் வேறு வழியின்றி குழந்தையை பெற்றுள்ளார் அந்த சிறுமி. 

மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி

சிறுமி பெற்ற குழந்தையானது அவர்களது உறவினர்களிடம்  வளர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமிக்கு 18 வயதான போது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த துயர சம்பவம் அந்த சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவர் விவாகரத்து செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு பின்னர் அந்த பெண் பாலியல் வன்கொடுமையால் பிறந்த தனது மகனை சந்தித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி செய்தி..! ரேஷனில் இனி இலவச பொருட்கள் கிடையாது

இந்நிலையில் மகனின் வற்புறுத்தல் காரணமாக சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் குற்றவாளிகளை போலிசார் கைது செய்தனர். பின்னர் அதில் ஒருவரின் DNA-வையும், அந்த பெண்ணின் மகனின் DNA-வையும் சோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு.. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?