
வீட்டு வேலைக்கு சென்ற 17 வயது சிறுமியை இரண்டு மாத காலமாக கஞ்சா கும்பல் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கஞ்சா வியாபாரிகளை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு தமிழகத்தில் குறிப்பாக நகர்ப்புறங்களில் கஞ்சா விற்பனை என்பதை படு ஜோராக நடந்து வருகிறது, பெரியோர் முதல் சிறியோர் வரை போதைக்கு அடிமையாகும் அவலம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் பெரும்பாலும் கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சமூகத்தில் கொலை கொள்ளை அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: ஆண் குழந்தைக்காக பொது இடத்தில் மனைவியை நிர்வாணமாக்கி கணவன் செய்த காரியம். போலீ சாமியாரால் நேர்ந்த அசிங்கம்.
அதன் ஒரு பகுதியாக போதை பொருள் ஒழிப்பில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். எந்தந்த பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் குறிவைத்து போலீஸார் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் அருகே சேலையூரில் கஞ்சா வியாபாரிகள் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்து கஞ்சா வியாபாரிகள் இருவரையும் அள்ளினர். அப்போது அங்கு அவர்களின் பிடியில் 17 வயது சிறுமி இருப்பது தெரியவந்தது. சிறுமியை மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இதையும் படியுங்கள்: ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி
பின்னர் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் கஞ்சா வியாபாரிகள் கடந்த இரண்டு மாதமாக கடுமையான சித்திரவதை செய்து வந்ததாக கண்ணீர் மல்க கூறினார், மேலும் கூறியதாவது :- பரங்கிமலையில் பெற்றோர்களுடன் வசித்து வந்தேன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மாவுக்கு மானநலம் பாதித்தது, எனவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்க முடியவில்லை, அம்மாவுக்கு இந்த நிலைமை ஏற்பட்டதால் அப்பாவும் எங்களை விட்டுச் சென்று விட்டார், எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, மடிப்பாக்கத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் உதவி கேட்டேன், எனக்கு வீட்டு வேலைகள் தெரியும் என்று அவரிடம் கூறினேன்.
எனவே என்னை தனது வீட்டில் தங்க வைத்தார், பின்னர் விஸ்வநாதன் என்பவரின் வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார், அங்கு சொல்றதும் எனக்கு பாலியல் சித்ரவதை தொடங்கியது, அவர்களுக்கு எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் என்னை வலுக்கட்டாயப்படுத்தி என்னுடன் உடலுறவு கொண்டனர், அதேபோல் அவர்களை தேடி வரும் நண்பர்களுக்கும் என்னை விருந்தாக்கினர், அதற்கு மறுப்பு தெரிவித்தால் என்னை கடுமையாக அடித்து துன்புறுத்தினர், கடந்த 2 மாதகாலமாக அவர்களிடம் சிக்கி சின்னாபின்னமானேன். பிறகுதான் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து என்னை அவர்கள் அந்த அரசியல் வாதியிடமிருந்து விலைக்கு வாங்கியதை தெரிந்துகொண்டேன்.
என கண்ணீர் மல்க கூறினார், இது குறித்து தெரிவித்த போலீசார் கடுமையான பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளார், அரசியல்வாதி விஸ்வநாதன் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார், திருவண்ணாமலையைச் சேர்ந்த பாரதி என்பவர் விசுவநாதன் வீட்டிற்கு சென்று சிறுமியை சில நாட்கள் அனுப்பி வைக்கும்படி கேட்டுள்ளார், அதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது, பின்னர் விஸ்வநாதனை அடித்து விரட்டிவிட்டு அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர் என கூறியுள்ளனர்.