ஆடு காணாமல் போனதில் மோதல்..! துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி துடி துடித்து பலி..! கோவையில் பரபரப்பு

Published : Oct 09, 2022, 10:12 AM ISTUpdated : Oct 09, 2022, 10:15 AM IST
ஆடு காணாமல் போனதில் மோதல்..! துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி துடி துடித்து பலி..! கோவையில் பரபரப்பு

சுருக்கம்

ஆடு காணாமல் போனது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆடு காணமல் போனதால் மோதல்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள கண்டியூர் ரங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சின்னசாமி தனது நண்பர்களான அய்யாசாமி,  குருந்தாசலம் மற்றும் ரஞ்சித்  ஆகிய  நால்வரும் ஒன்றாக அமர்ந்து அய்யாசாமி வீட்டில் மது குடித்துள்ளனர். அப்போது மது போதையில் சின்னசாமிக்கும் ரஞ்சித் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது சின்னசாமியின் ஆடுகள் நேற்றைய தினம் காணமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சின்னசாமி மற்றும் ரஞ்சித் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சின்னசாமி ரஞ்சித்தை தாக்கியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு துப்பாக்கியினை எடுத்து வந்து சின்னசாமியை சுட்டுள்ளார். இதில் நாட்டு துப்பாக்கியில் இருந்த 11 பால்ராஸ் குண்டுகள் பாய்ந்து சின்னசாமி உடலில் பாய்ந்துள்ளது.

கஞ்சாவுக்கு அடுத்து அதிகளவு விற்பனையாகும் போதை ஆயில்.. கோவையில் அதிரடி காட்டிய ரயில்வே துறை !

துப்பாக்கி சூடு- ஒருவர் பலி

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சின்னசாமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது குறித்து காரமடை போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலை நடந்த பகுதியில் தடயங்களை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  துப்பாக்கியால் சுட்ட ரஞ்சித்தை கைது செய்த போலீசார் துப்பாக்கியும் பறிமுதல் செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். ஆடு காணாமல் போன விவகாரத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

உலகில் உள்ள மதங்களுக்கு எல்லாம் தாய் மதம் இந்து மதம்..! ஆங்கிலேயர்கள் தான் இந்து என பெயர் வைத்தனர்- அண்ணாமலை

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!