திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தது போன்ற போலி கடிதத்தைக் காட்டி பள்ளி மாணவர்களிடம் மேஜிக் புக், காகித பொருட்களை விற்பனை செய்த வடமாநிலத்தவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அறிவிப்பு பலகையில் இருக்கும் முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்தை திருடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கொடுத்த உத்தரவு போன்று போலி கடிதம் தயார் செய்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து முதன்மை கல்வி அலுவலர் அனுமதி கொடுத்தது போன்ற கடிதத்தைக் காட்டி பள்ளி மாணவ மாணவிகளிடம் மேஜிக் புக், காகித கலைப்பொருள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நான் எந்த கையெழுத்தும் இடவில்லை யாருக்கும் சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை அவ்வாறு வந்தால் அது போலி என்று அறிக்கையை அனுப்பினார்.
சாத்தான்குளத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; அ.ம.மு.க. நிர்வாகி கைது
இந்நிலையில், ஆத்தூர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற ஒருவர் முதன்மை கல்வி அலுவலர் கொடுத்த கடிதம் என்று கூறி பள்ளி மாணவ மாணவிகளிடம் மேஜிக் புக், காகித கலைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். ஆத்தூர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நஸ்ருதீன் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்
தகவலின் பெயரில் உடனடியாக முதன்மை கல்வி அலுவலர் நசாருதீன், திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட வடமாநில நபரை கைது செய்து நகர் மேற்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டார்.
திண்டுக்கல்லில் தாய், மகள் வெட்டி படுகொலை; ஒருவர் படுகாயம் - காவல்துறை விசாரணை
விசாரணையில் அவர் மேக்ராஜ் ராய் (வயது 62) என்பதும் இவர் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் தங்கி இருப்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ரோஹித் ராய் (வயது 22), சமன்பாய் (வயது 22), அஜய் ராஜ் (வயது 23), மகேந்திரராய் (வயது 30) என ஐந்து பேரிடம் விசாரணை செய்ததில் அவர்கள் வைத்திருந்த திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் கையொப்பத்தை பயன்படுத்தி போலியாக தயார் செய்த கடிதத்தையும் கைப்பற்றினார். ஐவரையும் கைது செய்த போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.