குற்றம் சாட்டப்பட்ட பிஜோய் ராய், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், சிறுமிக்கு மது கொடுத்து ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள ஒரு உள்ளூர் நீதிமன்றம் சிறுவர் ஆபாச மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் பிவாஸ் சாட்டர்ஜி கூறியதாவது, குழந்தை ஆபாச வழக்குகளில் தண்டனை வழங்கும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் 67B பிரிவின் கீழ் வழங்கப்பட்ட முதல் தண்டனை என்பதை குறிப்பிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்ட பிஜோய் ராய், 16 வயது சிறுமியை டியூசன் வகுப்பு முடிந்ததும் வெளியே அழைத்துச் செல்வதும் வருவதுமாக நட்பாக பழகியுள்ளார். பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, அவளுக்கு மது வாங்கி கொடுத்து ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.
பின்னர், பிஜோய் ராய் சிறுமியின் திருமணத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், தனது வருங்கால மனைவி மற்றும் இரண்டு நபர்களுடன் சிறுமியின் ஆபாச புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் சிறுமியின் திருமணம் நின்றது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலைக்கு முயன்றபோது, உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
பலாத்கார முயற்சி! இறுதி வரை போராடிய இளம்பெண்! கடுப்பில் ஓடும் ரயிலில் தூக்கி வீசிய கொடூர கும்பல்..
நவம்பர் 2021-ல், கூச் பெஹாரில் உள்ள மெகோலிகஞ்ச் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை பிஜோய் ராய்க்கு எதிராக புகார் அளித்தார். அதன்படி, இந்திய தண்டனைச் சட்டம், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து, பிஜோய் ராய் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், பிஜோய் ராயின் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டு புனேயில் உள்ள மத்திய தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஆபாச படங்களைப் பெற்ற இருவரின் மற்ற மொபைல் போன்களும் தடயவியல் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன, அதில் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் மீட்கப்பட்டன.
ஃபேஸ்புக் நேரலையில் பெண் தற்கொலை: ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்!
தொடந்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில் கடந்த வியாழக்கிழமை, பிஜோய் ராய் குற்றவாளி என்று மெகோலிகஞ்ச் நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி (ADJ) ஹிரன்மய் சன்யால் தீர்ப்பளித்தார். 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ 1,30,000 அபராதமும் விதித்தார்.