பலாத்கார முயற்சி! இறுதி வரை போராடிய இளம்பெண்! கடுப்பில் ஓடும் ரயிலில் தூக்கி வீசிய கொடூர கும்பல்..

By vinoth kumar  |  First Published Jun 23, 2023, 3:47 PM IST

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். 


பாலியல் பலாத்கார முயற்சியில் இளம்பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து 32 வயது பெண் ஒருவரும், அவருடன் 22 வயது வாலிபர் ஒருவரும் சூரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் குஜராத் சென்று கொண்டிருந்தனர். அந்த பெட்டியில் 60 பயணிகள் வரை இருந்தனர். இந்நிலையில் குவாலியரை தாண்டி ரயில் சென்று கொண்டிருந்தபோது 5 வாலிபர்கள் அந்த பெண்ணை செல்போனில் போட்டோ எடுத்துள்ளனர். இதற்கு அந்த பெண்ணுடன் வந்த வாலிபர் எதிர்த்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே 5 பேரும் சேர்ந்து அந்த பெண்ணையும் வந்த வாலிபரை அடித்து உதைத்தனர். 

Tap to resize

Latest Videos

பின்னர்,  தகராறு வேண்டாம் என்று கருதி அப்பெண்ணும் அந்த வாலிபரும் ரயிலின் வாசல் பக்கம் வந்து அமர்ந்தனர். அங்கேயும் 5 பேரும் சென்று அப்பெண்ணை பாலியர் ரீதியாக துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அவருடன் வந்த நண்பர் தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேரும் இளம்பெண்ணையும், அவரது நண்பரையும் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசினார்கள். 

சம்பவம் நடந்தபோது அந்த பெட்டியில் பயணம் செய்தவர் யாரும் தட்டிக் கேட்கவில்லை. அரைகுறை ஆடைகளுடன் இருந்த பெண்ணிற்கு அவரது நண்பர் தனது கிழிந்த சட்டையை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார்.  படுகாயமடைந்த இரண்டு பேரும் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் நடந்தே சென்றனர். ஆனால், வழியில் இருந்த கிராமத்தினர் அவர்களுக்கு உதவ மறுத்துவிட்டனர். பின்னர், மூதாட்டி ஒருவர் அவர்களுக்கு உதவினார். அவர் தனது சேலை ஒன்றை அப்பெண்ணுக்கு அணியக் கொடுத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!