காரைக்குடியில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை.. முக்கிய அரசியல் தலைவர் கைது..! யார் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jun 24, 2023, 3:08 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 18-ம் தேதி கையெழுத்து போடச் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினித்தை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. 


காரைக்குடியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 18-ம் தேதி கையெழுத்து போடச் சென்றபோது, அந்த வழியாக காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், வினித்தை ஓட, ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் வினித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கொலை நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கேட்ட பணத்தை கொடுக்கலனா! உல்லாசமாக இருந்ததை வெளியே சொல்லிடுவேன்! மிரட்டிய பெண்! மருத்துவ மாணவர் செய்த பகீர்.!

இந்நிலையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சந்தை நடத்துவதற்கான ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியின் காரணமாக வினித் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கார்கள், இருசக்கர வாகனங்கள், ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

இதையும் படிங்க;-  ஸ்கூலில் வைத்து டிராயரை அவிழ்த்த ஆசிரியர்.. அந்தரங்க உறுப்பில் வலி.. கதறி துடித்த மாணவன்.. நடந்தது என்ன?

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த மருதுசேனை தலைவர் ஆதிநாராயணன், அவரின் மனைவி அமுதாராணி, தனசேகரன், மருதுசேனை அமைப்பின் முன்னாள் சிவகங்கை மாவட்டச் செயலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்த்து அமமுக வேட்பாளராக போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!