2 மாதத்தில் கசந்து போன கல்யாண வாழ்க்கை.. ஆத்திரத்தில் புதுப்பெண்ணை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

Published : Jul 04, 2023, 01:51 PM ISTUpdated : Jul 04, 2023, 01:52 PM IST
2 மாதத்தில் கசந்து போன கல்யாண வாழ்க்கை.. ஆத்திரத்தில் புதுப்பெண்ணை கதறவிட்ட கணவர்.. நடந்தது என்ன?

சுருக்கம்

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அடுத்துள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் சிலம்பரசன் (29). இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த ரோஜா (25) என்ற பட்டதாரி பெண்ணுடன் கடந்த மே 4-ம்  தேதியன்று சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது. 

திருமணமான இரண்டு மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் அடுத்துள்ள கீழ் அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகன் சிலம்பரசன் (29). இவருக்கும் சீர்காழி அடுத்த அரசூரை சேர்ந்த ரோஜா (25) என்ற பட்டதாரி பெண்ணுடன் கடந்த மே 4-ம்  தேதியன்று சிதம்பரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணமான அன்று முதலே கணவன், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- லாட்ஜ் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு! சிக்கிய இளம்பெண்கள்!

வழக்கம் போல நேற்று இரவும் ரோஜாவுக்கும்,  சிலம்பரசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து ஆத்திரமடைந்த சிலம்பரசன், தனது கையில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ரோஜா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

இதையும் படிங்க;-  அடப்பாவி.. கல்லூரி மாணவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.. எப்படி தெரியுமா?

இந்த சம்பவம் பற்றி அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து  ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் தெதாடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி