வாலாஜாப்பேட்டை அருகே கணவன் தொடர்ந்து குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு ஈடுபட்டதால் மனைவி ஆத்திரமடைந்து ரிப்பர் கட்டையால் தாக்கியதில் கணவன் பலி.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே வி.சி.மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40). லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பானுமதி (34). இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தேவராஜ் தொடர்ந்து தினம்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தினமும் மதுபோதையில் வருவதால் அவரது மனைவி சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் வீடான சின்ன தகரகுப்பம் கிராமத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு அதிக அளவில் குடித்துவிட்டு அங்கு வந்த தேவராஜ் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததை தொடர்ந்து நீ உயிருடன் இருக்கக் கூடாது என மனைவின் தலையில் கருங்கல்லை போட முயற்சித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பானுமதி அருகில் இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து தேவராஜ் தலையில் ஓங்கி அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
ஈரோட்டில் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை; நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் விபரீதம்
மேலும் கொலை சம்பவம் குறித்து தேவராஜன் தம்பி கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாலாஜாபேட்டை காவல் துறையினர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த தேவராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் அடிக்கடி தகராறு; குடும்ப தலைவரை தீர்த்துக்கட்டிய மனைவி, மகன்கள்