நகையோ பணமோ தொலைந்து போகல... அப்படின்னா இரட்டை கொலைக்கு இதுதான் காரணமா? பகீர் தகவல்..!

By vinoth kumar  |  First Published Jul 4, 2023, 9:01 AM IST

திருச்சி மாவட்டம்  துறையூர் அருகே பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் தொழில் செய்து வந்தனர். 


திருச்சி அருகே தம்பதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருச்சி மாவட்டம்  துறையூர் அருகே பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (29). இவரது மனைவி சாரதா (20). இவர்கள் சோபனபுரத்தில் விஜயசேகரன் என்பவரின் நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே காற்றோட்டத்திற்காக கட்டிலில் தம்பதி இருவரும் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் மறுநாள் காலையில் இருவரும் தலை, கழுத்து பகுதியில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- லாட்ஜ் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! கல்லா கட்டிய பிஸ்னஸ்க்கு ஆப்பு! சிக்கிய இளம்பெண்கள்!

இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலமாக கிடந்த இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க;-  ஃபர்ஸ்ட் நைட்டுக்கு போன புதுப்பெண்.. மறுநாளே பிறந்த குழந்தை.. அதிர்ச்சியில் கணவர்.. நடந்தது என்ன?

தம்பதியர் அணிந்திருந்த நகைகளோ, அவர்கள் வீட்டிலிருந்த பொருள்களோ எதுவும் திருடு போகாத நிலையில்,  காதல் திருமணம் செய்ததால் இக்கொலை நடந்துள்ளதா? தொழில் போட்டியால் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

click me!