சென்னையில் 3 சிறுமிகளை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேந்த இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண் உட்பட 3 பேர் தங்களது உறவினர் வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 30-ம் தேதி 17வயது சிறுமி இரவு 2 மணிக்கு வீட்டிற்கு வந்ததைப் பார்த்த அவரது சித்தப்பா கண்டித்துள்ளார். அப்போது சிறுமிக்கும், அவரது சித்தப்பாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரண்டு சக்கர வாகனங்களில் வந்த 5 பேர் தன்னைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி கூறியதைக் கேட்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
சிறுமியை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், சிறுமி மீது எந்த ஒரு காயங்களோ, பாலியல் வன்புணர்வு செய்ததற்கான அடையாளங்களோ இல்லை என்றும், அவரது ஒத்துழைப்பின் பேரில் பலமுறை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து போலீஸார் சிறுமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது உறவினரான 2 பெண்களும் சேர்ந்து இரவு நேரங்களில் பல இடங்களில் சுற்றி வந்ததும், அப்போது 15-க்கும் மேற்பட்டோர் அவர்களை ஆசைவார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
சம்பவம் நடந்த அன்று, இரண்டு பெண்களும் வீட்டிற்குச் சென்ற நிலையில், 17வயது சிறுமி மட்டும் அன்று நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்குச் சென்ற போது சித்தப்பா கண்டித்ததால் சிறுமி பொய் கூறியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி உட்பட 3 பேரை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தனுஷ்(19), சஞ்சய்(21), பாஸ்கர்(22), முத்துராமன்(21) உள்பட 15 முதல் 18 வயதுடையவர்கள் என 11 பேர் மீது போக்சா சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கி அந்த வாட்ஸ் அப் குழுக்களில், பெண்களின் புகைப்படத்தை பகிர்ந்து, கஸ்டமர்களை வரவைப்பதற்கு என பல புரோக்கர்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கார்த்திக் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர். புளியந்தோப்பு பகுதியில் 2 சிறுமிகள் உள்பட மூன்று பேரை 11 பேர் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூம் எடுக்க அதிக செலவா.? குறைந்த விலையில் ஹோட்டல் வசதி! IRCTC திட்டம் தெரியுமா உங்களுக்கு?