மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை மனைவி மற்றும் இரு மகன்கள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கணேசபுரம் கிழக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலமுருகன் (வயது 47). இவருக்கு போதுமணி என்ற மனைவி மற்றும் சூர்யா, சுகன் என்ற இரண்டு மகன்களும் நாகஜோதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் மகள் திருமணம் முடிந்து வேறு பகுதிக்கு சென்று விட்டார். மூத்த மகன் சூர்யா தனது குடும்பத்துடன் தந்தையுடனே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்.
இளைய மகன் சுகன் கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் பாலமுருகன் மது அருந்திவிட்டு வந்து மனைவி மற்றும் மகனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவிலும் மது குடித்து விட்டு வந்து வழக்கம் போல மனைவி மற்றும் மகன் சூர்யாவிடமும், வெளியூரில் இருந்து வந்திருந்த மகன் சுகனிடமும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
undefined
“நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே” குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
இதனால் ஆத்திரமடைந்த தாய் மற்றும் இரண்டு மகன்கள் சேர்ந்து கயிற்றால் பாலமுருகனின் கழுத்தை நெருக்கி கொலை செய்துவிட்டு தூக்கு மாட்டி பாலமுருகன் இறந்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளனர். இதையடுத்து சித்தார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனின் சாவில் மர்மம் இருப்பதாக கண்டமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மதம் மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கூடாது - அர்ஜூன் சம்பத் பேச்சு
புகாரின் அடிப்படையில் மூன்று பேரையும் அழைத்து காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், தந்தையை மனைவி மற்றும் இரு மகன்களும் சேர்ந்து கொலை செய்து நாடகம் ஆடியது அம்பலமாகியுள்ளது. இதையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தலைவரை குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.