தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த பெண்ணின் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வீரப்பட்டி சேவியர் காலனியை சேர்ந்தவர் முத்துக்குட்டி (44). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது ஒரே மகள் ரேஷ்மா (20), கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், இதே பகுதியை சேர்ந்த உறவினரான வடிவேல் மகன் மாணிக்கராஜ் (26) என்பவரை காதலித்துள்ளார். மாணிக்கராஜ், கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஊருக்கு வந்தார். இதனையடுத்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்
இதனால், கடந்த கடந்த ஜூன் 27ம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். காதலர்கள் இருவரும் ஜூன் 29ம் தேதி திருமணம் செய்து கொண்டு, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வந்தனர். ஊருக்கு திரும்ப நினைத்திருந்த காதல் ஜோடியிடம், இங்கு நிலைமை சரியில்லை, தற்போது ஊருக்கு வர வேண்டாமென உறவினர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் காதல் தம்பதி, கடந்த வாரம் ஊருக்கு வந்து, மாணிக்கராஜின் தாயார் பேச்சியம்மாளுடன் வசித்துள்ளனர். ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி பெண்ணின் தந்தை முத்துக்குட்டியை சமாதானம் செய்து வைத்தனர். அப்படி இருந்த போதிலும் அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை பேச்சியம்மாள் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த ரேஷ்மா மற்றும் மாணிக்கராஜாவை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து, முத்துக்குட்டி அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை முத்துக்குட்டியின் வீட்டில் போலீசார் கைப்பற்றினர். மாணிக்கராஜ், ரேஷ்மா ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய முத்துக்குட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- கதறியும் விடாத காமக்கொடூரன்.. அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரம்..!