என்னைவிட பெரிய ரவுடியா நீ? ரீகனை ரவுண்ட் கட்டி போட்டு தள்ளிய கொடூரம்.. நாகர்கோவிலில் பயங்கரம்.!

By vinoth kumar  |  First Published Jul 25, 2022, 1:30 PM IST

யார் பெரிய ரவுடி போட்டியால் ரீகன் என்ற ரவுடி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


யார் பெரிய ரவுடி போட்டியால் ரீகன் என்ற ரவுடி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் அருகே சுங்கான் கடை பகுதியில் நான்கு வழி சாலை பணி நடந்து வருகிறது. அந்த பகுதியில் வாலிபர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், கொலை செய்யப்பட்டவர் களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்த ரீகன்(34) என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா வியாபாரி ஆவார். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து ஒரு வாரத்துக்கு முன் தான் வெளியே வந்துள்ளார். இந்த கொலை தொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்

கொலை நடந்த இடத்தில் குருந்தன்கோடு முக்கலம்பாட்டையைச் சேர்ந்த அசோக் மற்றும் அஜின்ஜோஸ் ஆகிய இருவரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதில், அஜின் ஜோஸ் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தார். எனக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்ததையடுத்து எனது பாதுகாப்பிற்காக ஆன்லைனில் கத்தி ஒன்றை வாங்கி பாதுகாப்பிற்காக வைத்திருந்தேன். கொலை செய்யப்பட்ட ரீகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருந்து வந்து என்னை தொடர்பு கொண்டார்.

ஜெயிலில் இருந்த எனது நண்பர் ஒருவர் ரீகனிடம் என்னை பார்க்குமாறு கூறியதாக கூறினார். இதனால் ரீகனை சுங்கான்கடைக்கு வருமாறு கூறினேன். அவர் அங்கு வந்தார். நாங்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தோம். அப்போது எங்களுக்குள் இடையே திடீரென வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது ரீகன், என்னிடம் நீ என்ன பெரிய ரவுடியா? உன் மீது 2 வழக்குதான் உள்ளது. எனக்கு 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்று கூறி என்னை சரமாரியாக தாக்கினார்.

இதையும் படிங்க;-  கதறியும் விடாத காமக்கொடூரன்.. அரசுப்பள்ளி கழிப்பிடத்தில் வைத்து பள்ளி மாணவியை சீரழித்த கொடூரம்..!

இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நான் எனது பாதுகாப்பிற்காக வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தினேன். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த  ரீகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் என்றார். இதனையடுத்து, அஜின்ஜோஸ், அசோக் இருவரையும் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;-   என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தவல கல்யாணம் பண்ணிட்டியா.. பிளாக் மெயில் செய்த காதலியின் தலையை தனியாக எடுத்த காதலன்

click me!