ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்ததால் தாயே குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). இவரது மனைவி சகுந்தலா தேவி (21). இவர்களுக்கு 3½ வயதில் மகாஸ்ரீ என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சகுந்தலா தேவி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18ம் தேதி 2-வதாக மீண்டும் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த 9-வது நாளான கடந்த 27.4.2023ம் தேதி காலை சகுந்தலா தேவி குழந்தைக்கு பசியாற்றி விட்டு தூங்க வைத்து விட்டு வெளியே வந்தார். பின்னர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்ற போது குழந்தை இறந்து விட்டதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தவறான சிகிச்சையால் பாதிப்பு; உறுப்பு தானம் செய்வதாக கூறி பெட்ரோல் கேனுடன் வந்ததால் பரபரப்பு
பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் தலையில் உள்பக்கம் காயம் இருப்பது தெரியவந்தது. எனவே குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகம் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் குழந்தையின் தாய் சகுந்தலா தேவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2-வதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் குழந்தையின் தலையை அமுக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் சகுந்தலாதேவியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவின் வாக்கால் அமோக வெற்றி பெற்ற பாஜக