நெல்லை ரவுடிக்கு ஸ்கெட்ச்! என்கவுண்டரில் தப்பிய குற்றவாளி.. இறுதியில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Jan 5, 2024, 1:09 PM IST

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரபல ரவுடி சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். 


பெருந்துறையில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் தப்பிய சுப்ரமணியன், முத்து மணிகண்டன் ஆகியோர் நெல்லை மாவட்ட எல்லையில் பிடிப்பட்டனர். 

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் பிரபல ரவுடி சிவசுப்பு என்கிற சுப்பிரமணி (26). இவர் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதனை அறிந்த சுப்பிரமணி தனது கூட்டாளிகள் முத்து மணிகண்டன், இசக்கி, வசந்தகுமார், சத்யா 4 பேருடன் ஒவ்வொரு ஊராக தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர்! டவுட்டே வராமல் பக்கவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி! சிக்கியது எப்படி?

இந்நிலையில் சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வீட்டை சுற்றி வளைத்து பதுங்கி இருந்த ரவுடிகளை சுற்றிவளைக்க முயற்சித்தனர். அப்போது திடீரென சிவசுப்பிரமணி சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ என்பவரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். அப்போது தன்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால் அந்த குண்டு சுப்பிரமணி மீது படாமல் வீட்டின் ஓரத்தில் பாய்ந்தது. 

இதையும் படிங்க;-  உனக்கு ஜாதி விட்டு ஜாதி பொண்ணு கேக்குதா! பெற்ற மகளையும், காதலனையும் துடிதுடிக்க ஆணவக் கொலை கொலை செய்த தந்தை.!

இதனையடுத்து சுப்பிரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பித்தனர். உடனடியாக இதுகுறித்து தனிப்படை போலீசார் பெருந்துறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நெல்லை மாவட்ட எல்லையில் சுப்பிரமணி அவரது கூட்டாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

click me!