திருப்பூரில் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் படுகொலை

By Velmurugan s  |  First Published Jan 4, 2024, 2:34 PM IST

திருப்பூரில் முன் விரோதம் காரணமாக பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர் வெள்ளியங்காடு அருகில் உள்ள திரு.வி. க. நகர், நாவிதன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 42). இவர் வேலைக்குச் சென்று விட்டு  வீட்டிற்கு செல்வதற்காக திரு.வி.க. நகர் முதல் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த  மூன்று பேர் கொண்ட மர்மகும்பல் பாலமுருகனை வழிமறித்து தலையில் சரமாரியாக வெட்டி முகத்தை சிதைத்து  கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். 

கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தெற்கு காவல் துறையினர் வெட்டுப்பட்டு முகம் சிதைக்கப்பட்டு உயிரிழந்த பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தொடர்ந்து சம்பவ இடத்திற்கு திருப்பூர் மாநகர காவல்  துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோப்பநாய் ஹண்டர் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

அரையாண்டு தேர்வில் 60% மதிப்பெண் எடுத்த மாணவன்;  பெற்றோர் நன்றாக படிக்க சொன்னதால் தற்கொலை 

மோப்பநாய் ஹண்டர் சிறிது தூரம் சென்று மீண்டும் கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கே  வந்தது. மேலும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பாலமுருகன் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், இக்கொலையானது பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக நிகழ்ந்திருக்கலாம் என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலை காவல்துறையினர் மூன்று தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

போலீசை பார்த்து பதறிய இளைஞர்கள் எதிரே வந்த வாகனத்தில் மோதி விபத்து; வேடிக்கை பார்த்த போலீஸ் மீது மக்கள் ஆத்திரம்

ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொலை சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!