மதுரையில் தனியார் கல்லூரி முன்பாக வாலிபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த நிலையில் பெட்ரோல் நிரப்பிய கேனுடன் வந்த வாலிபர் ஒருவர் திடீரென்று தான் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனால் அவரது உடை முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.
திருச்சியில் மொத்தமாக பெயர்ந்து விழுந்த மேற்கூரை; 2 சிறுமிகள் உள்பட 4 பேர் உடல் நசுங்கி பலி
undefined
மேலும் வெப்பம் தாங்காமல் சாலையில் சிறிது தூரம் ஓடிய அந்த நபர் ஒரு கட்டத்தில் சாலையிலேயே கரிக்கட்டையாக கீழே விழுந்தார். இதனால் அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடல் முழுவதும் தீ பரவியதால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விமான நிலையத்திற்கு நிகராக பேருந்து நிலையம்; பொங்கலுக்குள் அனைத்து சரியாகவிடும் - அமைச்சர் தகவல்
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீக்குளித்த வாலிபர் யார்? எதற்காக தீக்குளித்தார்? அவர் கல்லூரி முன்பாக தீக்குளித்தது ஏன்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.