போதை ஏற்ற பணம் தராத தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு சரண்டர் ஆன இளைஞர்

Published : Dec 31, 2023, 10:56 PM ISTUpdated : Jan 01, 2024, 02:20 AM IST
போதை ஏற்ற பணம் தராத தாயைக் கொடூரமாகக் கொன்றுவிட்டு சரண்டர் ஆன இளைஞர்

சுருக்கம்

அதிகாலை 5 மணியளவில், ஷாருக் காவல் நிலையத்திற்குச் சென்று  அம்மாவைக் கொன்றுவிட்டதாக கூறினார் என போலீசார் சொல்கின்றனர்.

இளைஞர் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்காக பணம் கேட்டு சண்டையிட்டு தாயையே கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் காசியாபாத் அமன் கார்டன் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான 24 வயது இளைஞர் ஷாருக், தாயைக் கொன்ற பின்பு அருகில் இருந்த லோனி காவல் நிலையத்திற்கு சென்று தனது தாயைக் கொன்றுவிட்டதாகச் சொல்லி சரண் அடைந்துள்ளார்.

சனிக்கிழமை, அதிகாலை 5 மணியளவில், ஷாருக் காவல் நிலையத்திற்குச் சென்று  அம்மாவைக் கொன்றுவிட்டதாக கூறினார் என போலீசார் சொல்கின்றனர். அசோக் விஹார் காலனியில் உள்ள வீட்டில் உடல் முழுவதும் கத்தியால் தாக்கிய காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாரூக்கின் தாயை போலீசார் சடலமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

33வது மாடியில் நின்று சிகரெட் பிடித்து கெத்து காட்டியவருக்கு நேர்ந்த விபரீதம்!

கொல்லப்பட்ட தாய் தில்ஷாத் பேகம் 65 வயதானவர். போதைப்பொருள் வாங்குவதற்கு பேகம் பணம் தர மறுத்ததால், இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது என ஷாரூக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிந்தது.

பணம் தர மறுத்துவிட்டு தனது அறைக்குத் தூங்கச் சென்றபோது, ஆத்திரத்தில் அம்மாவைக் கத்தியால் பலமுறை குத்தி இருக்கிறார் ஷாரூக். முதலில் தரையில் இருந்த ரத்தத்தைத் துடைத்து கொலையை மறைக்க எண்ணிய அவர், பின்பு மனம் மாறி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி