இந்து மக்கள் கட்சி நிர்வாகியை விரட்டி விரட்டி வெட்டிய கொலைக்கார கும்பல்.!! திருப்பூரில் பரபரப்பு.!!

Published : Mar 17, 2020, 11:49 PM ISTUpdated : Mar 18, 2020, 12:10 AM IST
இந்து மக்கள் கட்சி நிர்வாகியை விரட்டி விரட்டி வெட்டிய கொலைக்கார கும்பல்.!! திருப்பூரில் பரபரப்பு.!!

சுருக்கம்

இந்து மக்கள் கட்சி நிர்வாகியை மர்ம கும்பல் வெட்டி சாய்த்ததில் பலத்த காயமடைந்த நந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இதனால் அப்பகுதியில் கட்சி நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பாக காணப்படுகின்றது.

T.Balamurukan

இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டத் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் பகவான் நந்து, இவர் பெருமாநல்லூரை அடுத்த கணக்கம்பாளையத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். இந்த நிலையில், பகவான் நந்து வழக்கம் போல்  இரவு கடையைப் பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள வீட்டுக்கு  இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் பகவான் நந்துவின் இரு சக்கர வாகனத்தை மறைத்திருக்கிறது.

பின்னர் அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள்களால் பகவான் நந்துவை சரமாரியாக வெட்டி சிதைத்திருக்கிறது அந்த கும்பல். இதில்,பலத்த காயமடைந்த நந்துவை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பகவான் நந்து வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். திருப்பூர் மாவட்டமே பரபரப்பாக இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!