மனைவி தற்கொலையை வாட்ஸ் அப்பில் லைவ்வாக கணவருக்கு அனுப்பிய மனைவி.!! புருசனை பொளந்து கட்டிய உறவினர்கள்.!!

Published : Mar 17, 2020, 11:25 PM IST
மனைவி  தற்கொலையை வாட்ஸ் அப்பில் லைவ்வாக கணவருக்கு அனுப்பிய மனைவி.!! புருசனை  பொளந்து கட்டிய உறவினர்கள்.!!

சுருக்கம்

தர்மபுரி மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல், இவர் டிவி கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா. இவர்கள் காதலித்து  6 மாதத்திற்கு முன் திருமணம் செய்துள்ளனர். தற்போது தீபா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ராகுல் வழக்கம்போல் கடைக்கு வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த தீபா சமையல் செய்தபோது அடுப்பில் இருந்து தீ பிடித்ததாக சொல்லப்பட்டது.  உடனடியாக அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்தார்.  

T.Balamurukan

 திருப்பத்தூர் டவுன் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.  இந்நிலையில் தீபாவின் தம்பி, தன் அக்கா சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தம்பதியினர் திருப்பத்தூர் ஜெர்மன் ரங்கநாதன் தெருவில் தனிக்குடித்தனம் செய்து வந்தனர். அப்போது ராகுல் வேறு ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்ய முயற்சி செய்தாராம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு முற்றியிருக்கிறது 

 ராகுல் வெளியே சென்ற நிலையில் தீபா கணவருடன் பேச பலமுறை செல்போனில் முயன்றும் ராகுல் போனை எடுக்கவில்லையாம். இதனால் மனமுடைந்த தீபா, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிகொண்டு செல்போனில் படம் எடுத்து கணவர் ராகுலுக்கும், தனது தம்பி சுரேசுக்கும் அனுப்பினார். இதை பார்த்த சுரேஷ்,  தீபாவிற்கு போன் செய்து விவரத்தை கேட்டிருக்கிறார். நான் நேரில் வருகிறேன். எந்த விபரீத முடிவையும் எடுக்க வேண்டாம் என்று சுரேஷ் கூறியிருக்கிறார். அதன்பிறகு, ராகுலுக்கு சுரேஷ் போன் செய்து வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். அதன்பிறகு வாட்ஸ்அப்பை பார்த்த ராகுல் பதறியடித்து மனைவிக்கு போன் செய்தார். 

அதற்குள்ளாக தீபா தீ வைத்துக்கொண்டு அதையும் செல்பி எடுத்து அதை கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.  ராகுலும், சுரேஷூம் வீட்ட்டிற்கு வருவதற்குள் தீபா தீயில் கருகிய நிலையில் ஆபத்தான நிலையில் கிடந்திருக்கிறார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 
 
PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!