ஆடி மாதம் என்பதால் குலதெய்வ வழிபாடு செய்து தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த திட்டமிடப்பட்டது.
மேல்மலையனூர் அருகே குடிபோதையில் தம்பியை அண்ணன் கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (36) சலூன் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி நந்தினி(30). இவர்களுக்கு இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆடி மாதம் என்பதால் குலதெய்வ வழிபாடு செய்து தனது பிள்ளைகளுக்கு காதணி விழா நடத்த திட்டமிடப்பட்டது.
இதையும் படிங்க;- கடவுளே யாருக்கும் இது மாதிரி கொடுமை நடக்கக்கூடாது! கணவர் கண் முன்னே தலை நசுங்கி உயிரிழந்த காதல் மனைவி.!
இதற்காக உறவினர்களுக்கு அழைப்பு விடுத்து வந்தனர். இதையடுத்து தனது அண்ணன் விநாயகத்தை (40) அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு முருகன் சென்றார். அப்போது விநாயகம் மூக்கு முட்ட குடித்திருந்தார். இதனால், முருகனுக்கும், விநாயகத்திற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த விநாயகம் கத்தியை எடுத்து வந்து தம்பி என்று கூட பாராமல் முருகனின் மார்பில் சரமாரியாக குத்தியுள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி! ஆத்திரத்தில் கிருமிநாசினி ஊற்றி கொலை.!
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைகளின் காதணி விழாவிற்கு அழைக்க வந்த தம்பியை அண்ணனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.