ஓடும் ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை.. அலறி கூச்சலிட்டதால் பரபரப்பு

By vinoth kumar  |  First Published Aug 2, 2023, 2:09 PM IST

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி. இவர் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோ ஓட்டுநர் வராததால் அவருக்கு பதிலாக வேறொரு ஓட்டுநர் வந்துள்ளார்.


ஆட்டோவில் பள்ளி மாணவிக்கு கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி. இவர் தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்கு வழக்கமாக செல்லும் ஆட்டோ ஓட்டுநர் வராததால் அவருக்கு பதிலாக வேறொரு ஓட்டுநர் வந்துள்ளார். அப்போது ஆட்டோவில் தனியாக இருந்த பள்ளி மாணவியிடம் ஓட்டுநர் கண்ட இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஸ்கூல் டீச்சரை கரெக்ட் செய்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர காதலன்.!

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அலறி கூச்சலிட்ட படியே கதறி அழுதுள்ளார். இதனை அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிலர் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்து மடக்கி பிடித்து நிறுத்தினர். 

இதையும் படிங்க;- அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி! ஆத்திரத்தில் கிருமிநாசினி ஊற்றி கொலை.!

பின்பு ஆட்டோவில் இருந்த மாணவியிடம் விசாரித்த போது ஆட்டோ டிரைவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற விவரத்தை தெரிவித்தார். இதையடுத்தது ஆட்டோ ஓட்டுநருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து டிரைவர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!