கர்நாடகா மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவருக்கு சமூக வலைதளம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு கொடிகேஹள்ளி பகுதியில் இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவருக்கு சமூக வலைதளம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, இருவரும் தனிமையில் சந்தித்து எல்லை மீறியுள்ளனர். இதை காதலிக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோவாக காதலன் எடுத்துள்ளார். இந்நிலையில், காதலி என்று கூட பாராமல் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு காதலன் மிரட்டியுள்ளார்.
இதையும் படிங்க;- அண்ணா ப்ளீஸ் என்ன விட்டுடுங்க! பலாத்காரத்தை எதிர்த்து போராடிய மாணவி! ஆத்திரத்தில் கிருமிநாசினி ஊற்றி கொலை.!
இதை சமூகவலைதளங்களில் வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால் நான் கூப்பிடும் போதெல்லாம் என்னுடை ஆசைக்கு இணங்க வேண்டும் கூறி பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். தான் அனுபவித்தது போதாது என்று காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ளார்.
இதையும் படிங்க;- கல்யாணம் பண்ணி 10 நாள் கூட ஆகல.. அதுக்குள்ள என் புருஷனை இப்படி கொன்னுட்டாங்களே.. கதறும் காதல் மனைவி.!
பெண்ணை நாசம் செய்தது மட்டுமல்லாமல் அதுகுறித்த ஆபாச வீடியோக்களை அந்த கும்பல் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதனால் பொறுமை இழந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜார்ஜ், சந்தோஷ் மற்றும் சாஷி ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ளனர். ஜார்ஜ் என்பவர் தான் பெண்ணின் காதலன் என்பது குறிப்பிடத்தக்கது.