என்ன ஒரு தைரியம்..! பட்டப்பகலில் கோர்ட் பின்புறத்தில் போட்டு தள்ளிவிட்டு அசால்டாக நடந்தும் செல்லும் கும்பல்.!

Published : Feb 13, 2023, 01:41 PM ISTUpdated : Feb 13, 2023, 04:45 PM IST
என்ன ஒரு தைரியம்..! பட்டப்பகலில் கோர்ட் பின்புறத்தில் போட்டு தள்ளிவிட்டு அசால்டாக நடந்தும் செல்லும் கும்பல்.!

சுருக்கம்

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். 

கோவை நீதிமன்றம் பின்புறம் 2 இளைஞர்கள் மீது  5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரி தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் எந்த ஒரு அச்சமுமின்றி எதார்த்தமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் பல்வேறு கடைகள் வழக்கறிஞர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த இரு இளைஞர்கள் மீது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துவிழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க போட்டோ போட்டி.. ஜல்லிக்கட்டு வீரர் கொலை.. வெளியான பகீர் தகவல்.!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்புலன்ஸில் காயமடைந்த இளைஞரையும், உயிரிழந்த இளைஞரின் உடலையும் ஏற்றி சென்றனர். சம்பவ இடத்தில் மாநகர காவல் துணை ஆணையர் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 
இச்சம்பவத்தில் இளைஞர் ஒருவரை அக்கும்பல் தாக்கிவிட்டு எதார்த்தமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. நீதிமன்ற வளாகம் பின்புறம் நடைபெற்ற நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விசாரணையில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர் கீரநத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பதும், காயமடைந்த இளைஞர் கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்த மனோஜ் என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5  தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  சென்னையில் மசாஜ் சென்டரில் மஜாவாக நடைபெற்ற ஐடெக் விபச்சாரம்.. அரைகுறை ஆடைகளுடன் 5 இளம்பெண்கள் சிக்கினர்.!

போலீசார் முதற்கட்ட விசாரணையில் ரத்தினபுரியைச் சேர்ந்த சூர்யா, வெள்ளலூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன், சித்தாபுதூரைச் சேர்ந்த கவாஸ்கான், ரத்தினபுரியைச் சேர்ந்த கவுதம்  உள்ளிட்டோர் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரத்தினபுரியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் கடந்த 20.12.2021 அன்று கொல்லப்பட்டார். அதில், கோகுல் உள்ளிட்ட 5 பேருக்கு தொடர்புள்ளது. இக்கொலைக்கு பழிவாங்குவதற்காக கோகுல் கொல்லப்பட்டு இருக்கலாம் எனத் தகவல் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!