கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கோவை நீதிமன்ற வளாகத்திற்கு வாய்தாக்காக இரண்டு பேர் வந்துள்ளனர். அப்போது நீதிமன்றத்தின் பின்புறம் நுழைவாயில் அருகே திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட நடுரோட்டில் இருவரையும் ஓட ஓட சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக தப்பியது.
உடனே நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பில் இருந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்யப்பட்டவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயமடைந்த சிவானந்தா காலணியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது. எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வளாகதத்தில் கொலையை கண்ட பொதுமக்கள் அலயடித்துக்கொண்டு அங்கு இங்கும் ஓடினர். நீதிமன்ற வளாகத்தில் கொலை நடைபெற்றுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் ஓட ஓட வெட்டிய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.